#வாழைப்பழம்:
வைட்டமின் எ, பி, சி, ஈ என அதிகமான அளவில் சத்துக்களை கொண்டது வாழைப்பழம். ஒரு வாழைப்பழத்தில் 450 மிகி அளவு பொட்டாசியம் இருக்கிறது. இது இதய நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாமல் காக்கும்.
#மாம்பழம்:
வைட்டமின் எ இதில் அதிக அளவில் உள்ளதால் சருமத்தின் பொலிவை கூட்டும். மேலும் இதில் பாலிபினால்ஸ் என்ற மூல பொருள் புற்றுநோயை தடுக்கும்.
#அன்னாச்சிபழம்:
அன்னாச்சி பழம் எலும்புகளுக்கு அதிக வலிமையை தரும். எதிர்ப்பு சக்தி குறைபாடு, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த பழம் சிறந்த மருந்தாகும். செரிமான பிரச்சினையும் தீரும்.
#மஞ்சள்குடைமிளகாய்:
குடை மிளகாய் பல நிறங்களில் உள்ளது. மஞசள் குடை மிளகாயில் நார்சத்து, இரும்புசத்து, புரதம் போன்றவை உள்ளது.
#எலுமிச்சை:
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் உடல் பருமன், அஜீரணம், நீர்சத்து குறைபாடு போன்றவற்றிற்கு உதவும். மேலும், கிட்னியில் கற்கள் உருவாகாமல் பாதுகாக்கும்.
#சோளம்:
சோளத்தை உணவில் சேர்த்து அரிப்பு, சொறி போன்றவற்றை ஏற்படாமல் காக்கும். மேலும், சருமத்தின் பாதுகாப்பையும் அதிகரிக்கும்.
Tags: yellow fruits and vegetables yellow
Benefits of eating more yellow fruits and vegetables