அக்குபஞ்சர் தத்துவப்படி, நமது உடலில் அமைந்துள்ள பஞ்சபூதங்கள் எனப்படும் – நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்- எனும் ஐந்து மூலகங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாலேயே நோய் தோன்றுகிறது.
– நமது முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள்,
அளவான உடல் உழைப்பு, அல்லது உடற்பயிற்சி இன்மை, போதுமான அளவு உறக்கமின்மை…
ஆகிய காரணங்களால், பஞ்சபூதங்களின் செயல்திறன் பாதிக்கப்படுவதனால், நமது உடலில் நோய் தோன்றுகிறது.
மேலும்
– குளிர்
– வெப்பம்
– அதிக வெப்பம்
– காற்று
– ஈரப்பதம்
– மிகவும் உலர்ந்த தன்மை
ஆகிய சுற்றுப்புற சூழ்நிலைகளால் ஏற்படும் தாக்கங்களும் காரணமாகின்றன.
இவை தவிர
– கோபம்
– துக்கம்
– ஆழ்ந்த சிந்தனை
– கவலை
– ஆவல்/பதட்டம்
– பயம்
– சந்தோஷம்
– பிடிவாதம், எரிச்சல்
ஆகிய பலவகை உணர்ச்சிகள் , அளவுக்கு அதிகமாக மனதை ஆக்கிரமிக்கும்போது, உடலின் சக்தி ஓட்டப்பாதையில் குறுக்கீடு ஏற்பட்டு, நோய் ஏற்படுகிறது.
கீழே விழுதல், விபத்து , பாம்பு கடித்தல், கத்தி குத்து,
போன்ற காரணங்களும் உண்டு.
“உட்கிரகித்தல் – கழிவு நீக்கம் “
மேற்கூறிய பல காரணங்களால், நமது உடலின் அடிப்படை கட்டமைப்பான “செல்”களின் செயல்திறன் கெடுகிறது.
நமது உடலில் உள்ள ஒவ்வொரு ‘செல்’லும் தான் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத தேவையான காற்றை சுவாசிக்கிறது, மற்றும் உணவு எடுத்துக்கொள்கிறது என்பதை நாம் அறிவோம்.
வாயு, திரவ மற்றும் திட தாதுக்களின் “சக்தி கிரியை” ஒவ்வொரு “செல்”லுக்குள்ளும் முடிவடைந்த நிலையில் – கழிவுகள் “செல்” லிலிருந்து நீக்கப்படுகின்றன.
“உட்கிரகித்தல் – கழிவு நீக்கம் ” இவ்விரண்டு செயல்களும் செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருக்கையில் உடல் நலத்திற்குப் எவ்விதப் பங்கமுமில்லை. இவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் வலி, வீக்கம் மற்றும் நோய்க் குறிகளாக அறியப்படுகின்றன.
கழிவுகளின் தேக்கமே அநேக நோய்கள் ஏற்படுவதற்கு மூல காரணமாக அமைகிறது.
தும்மல், இருமல், வாந்தி, வயிற்றுப்போக்கு – ஆகியவை ஏற்படும்போது, அதற்கான காரணத்தை நாம் அறிய முற்படவேண்டும். அவை நமது உடலில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக நி்கழக்கூடிய இயற்கையான கழிவு நீக்கச்செயலாக இருக்கலாம்.
உடலுக்கு தேவையில்லாத, ஒவ்வாத ஒன்றினை, வெளியேற்றும் செயல்களே தும்மல், இருமல் முதலியன.
நமது உடல் – தன்னை தானே சரி செய்து குணப்படுத்திக்கொள்ளும் அற்புத ஆற்றல் உடையது. அது பெரும்பாலும், உடலின் பஞ்ச மூலக சமன்பாடு சீர் குலையாமல் பாதுகாப்பதன் பொருட்டு நிகழும் அனிச்சைச் செயலாகவே இருக்கும்.
பிரச்சினையின் மூல காரணத்தை கண்டறிவதோடு, இயல்பான கழிவு நீக்கம் நடைபெறும் வகையில் நமது செயல்பாடுகளை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில், ஒருவர் – தனது உடலைப்பற்றியும் , அதன் செயல்பாடுகளைப் பற்றியும் ஓரளவாவது தெரிந்து வைத்திருப்பது அவசியமாகின்றது.
தேவையில்லாமல் – கழிவு நீக்கத்தை நிறுத்த முற்படும்போது – கழிவுகளின் தேக்கம் அதிகமாகி உடலில் பிரச்சினை மேலும் முற்றுகிறது.
மிகப்பெரிய அதிசயம் நம் உடலானது, உடலில் வரக்கூடிய அனைத்து விதமான நோய் என்று பெயர் வைத்திருக்கக் கூடிய, அனைத்து விதமான தொந்தரவுகளையும், தனக்குத் தானே குணப்படுத்திக் கொள்ளக் கூடிய மிகப்பெரிய ஆற்றலை தன்னகத்தே தானே வைத்து இருக்கின்றது…
எனவே உடலின் மொழியை, உடலின் ஆற்றலை தெளிவாக நாம் தெரிந்து கொள்வதன் மூலம், அனைத்து விதமான தொந்தரவுகளுக்கும் எளிய வழியில் தீர்வு காணலாம்…
உலகில் மிகப்பெரிய மருத்துவர் நம் உடல் தான்…
எனவே உடல் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொள்கின்றது…அதனை புரிந்து நடந்தால் வாழ்வில் என்றென்றும் ஆரோக்கியமே…
Tags body acupuncture self cure
Acupuncture is our body’s greatest doctor in the world