பெண்களின் மாதவிலக்கு கோளாறை நீக்கும் ஒரு அற்புத வைத்தியம்

🌹பெண்கள் இப்போதெல்லாம், மாத விடாய் காலங்களில் அதிக வலியுடன் அல்லல் படுகின்றனர். மேலும், தாமதமாக வரும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் காலங்களிலும், இந்த வேதனைகளால், பள்ளிச் சிறுமியர் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை, அனைவரும் துயறப்படுகின்றனர்.

எதனால் வருகிறது இந்த வலியும், ஒழுங்கற்ற மாதவிடாயும்?

🌹அதிக காலை நேர வீட்டு வேலைகளால் அல்லது நேரமின்மையால் காலை உணவைத் தவிர்ப்பது, முதல் காரணம்.

🌹ஹார்மோன்கள் குறைபாடு மற்றும் தாமதமாகும் மாத விடாய்க் காலங்களால் பெண்களுக்கு இந்த வலி அதிகமாக ஏற்படும். பொதுவாக, மாதவிடாய்க் காலங்களில் வலியும், சோர்வும் வருவது இயற்கையே என்றாலும், இன்றைய உலகில் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளும், பணிக்குச் செல்லும் பெண்களுமே, அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.🌹 என்னசெய்ய வேண்டும்?

காலை உணவை தவிர்க்கக் கூடாது, அவசியம் சாப்பிட வேண்டும், இட்லி அல்லது கஞ்சி கூட குடிக்கலாம், ஆனால் ஏதேனும் ஒரு உணவு அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் உடல் ஜீரண உறுப்புகளுக்கு ஏதும் வேலைகள் இல்லாத போது, ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மாதவிலக்கு நேரத்தில் வலிகள் ஏற்படக் காரணமாகிறது. எண்ணெய் உணவுகள் மற்றும் மசாலாப் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும்.

🌹அற்புத_மருந்து :

உடலின் வலிவிற்கும் மனதின் பொலிவிற்கும் சித்தர்கள் கூறும் காய கற்பங்கள், உறு துணையாகும், காய கற்பங்கள் மூலம் நோய் நீங்கி மனமும் செம்மையாகி, நரை திரை மூப்பு இன்றி, பெரு வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் நல் வாக்கு.

அத்தகைய பெருமையும் உயரிய குணங்களும் கொண்ட காய கற்ப மூலிகைகளில் கடுக்காய் ஆகும். கடுக்காய் உண்டால், மிடுக்காய் வாழலாம்.

🌹கடுக்காய் மனிதனின் உடல் நலத்தில் பெரும் பங்கு வகிக்கிறது, ஒருவன் தன் உடல் நலனுக்காக மருந்து உண்ண முயற்சிக்கும் வேளையில், முதலில் உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கி உடல் தூய்மை பெற வேண்டும். தினமும் இரவில் கடுக்காய்ப் பொடி உண்டுவர, மாசுக்கள் நீங்கி உடல் வலுவாக, கடுக்காய் அருந் துணை புரியும்.

இத்தகைய ஆற்றல் மிக்க மூலிகை கடுக்காய் மூலம் இளம் பெண்டிரின் மாத விடாய்க் கோளாறுகளை சரி செய்வது எவ்வாறு, எனப் பார்க்கலாமா?

🌹கடுக்காயின்_ரகசியம் :

கடுக்காய் எனப்படுவது காய்ந்து சற்று சுருங்கிய தோலுடன் காணப்படும், கடைகளிலும் காயாகவும் கிடைக்கும், இந்தக் கடுக்காய்களை வாங்கிக் கொள்ளவும். இவற்றிலிருந்து கொட்டையை நீக்க வேண்டும், கடுக்காய்க் கொட்டைகள் மருந்துக்கு ஏற்றதல்ல, கடுக்காயின் தோலே மருந்தாகும்.

🌹பயன்படுத்தும்_முறை :

கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். அத்துடன் சிறிதுஇலவங்கப்பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர, மாதாந்திர வலிகள் எல்லாம் ஓடி விடும்.

🌹நன்மைகள் :

அது மட்டுமா, ஒழுங்கற்ற மாதவிடாயும் சீராகும், பெண்கள் அதன் பிறகு இனி, மாதா மாதம் மாதவிடாய் நேரங்களில், நிம்மதியாக இருக்கலாம். கடுக்காய் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடல் நலம் காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதிக காரம் மற்றும் கொழுப்புகள் சேர்ந்த உணவுகளால், உடலின் செரிமானத் திறன் பாதிக்கப்பட்டு, அதனால் வயிற்றில் சேரும் நச்சுத் தன்மைகளே உடலின் பல்வேறு உபாதைகளுக்கும் மூல காரணம், இத்தகைய நச்சுக்களால் தான், மாதாந்திர வலிகளும் கடுமையாக ஏற்பட்டன.

🌹நோய்எதிர்ப்புசக்தி :

கடுக்காய் தோல் தீநீர் உடல் நச்சு போக்கி, உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடும், உடலின் பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்த அற்புத குணப்படுத்தும் நிலைகளால்தான், இயற்கையாக அதிகரிக்கும் உடலின் ஆரோக்கிய செயல் பாடுகளால், பெண்கள் உடல் பாதிப்புகள் ஏதுமின்றி, தேறி வரும். அற்புத கற்ப மூலிகை கடுக்காய்ப் பொடி, தினந்தோறும் இரவில் சாப்பிட்டு வர, நம் உடலை நோய்களில் இருந்து காக்கும், உடலுக்கும் மனதிற்கும் எப்போதும், நல்லதை மட்டுமே செய்யும்.🌹🙏

1. முடக்கத்தான் கீரைச் சாற்றில் கறுப்பு எள்ளை அரைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்கு உண்டாகும்.

2. கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து, காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் தாமதித்த மாதவிலக்கு சீராகும்.

3. வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.

4. பிரண்டையை இடித்துச் சாறு எடுத்து, அதில் சிறிது பெருங்காயம் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்னைகள் சரியாகும்.

5. உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ள கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் வலுப்பெறும்.

குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

தினமும் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.

அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம்.

கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக செய்து சாப்பிடலாம். இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்ட்ரால் குறையும்.

கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேர்த்து கொள்ளலாம். குடலுக்கு வலிமை அளிக்கும், உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.

இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

கேழ்வரகு கூழ்

முதல் நாளே ஒன்றரை ஆழாக்கு மாவுடன் நாலரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

அரை ஆழாக்கு அரிசி நெய்யுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். பாதி வெந்ததும் கரைத்த கேழ்வரகு மாவை ஊற்றிக் கைவிடாமல் கிளறவும்.

மாவு வெந்து பளபளவென்று வந்ததும் உப்பு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும். மறுநாள் காலை கடைந்த தயிர், அரிந்த வெங்காயம் இரண்டையும் கலந்து சாப்பிடவும்.

Tags: Periods Pain kadukkai menstrual

A wonderful remedy for menstrual disorders in women

Leave a Comment