நீ என்ன பெரிய பிஸ்தாவா?

உண்மையில் பிஸ்தா கொட்டை (அ) பருப்பு என்பது உலர்ந்த பிஸ்தா பழத்தின். இதில் நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் ஆகியவை நிறைய உள்ளதால் சுமார் 9௦௦௦ வருடங்களுக்கு மேலாக இதனை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஊட்டச்சத்துக்கள்
பிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டச்சத்து கொண்டது. உதாரணமாக சுமார் 28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் B6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு உள்ளன. மற்ற எல்லா பருப்பு வகைகளைக் காட்டிலும் பிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை எல்லாமே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை தரும். அதனால் தான் நீ என்ன பெரிய பிஸ்தாவா என்று கேட்கிறார்கள் போல…
பிஸ்தா பருப்பு இருதயத்தின் ஆரோக்கியதிற்க்கு உதவுகிறது

ஆராய்ச்சி முடிவுகள், பிஸ்தா பருப்பு இதயத்திற்கு நன்மை தரும் கொழுப்பை கொண்டிருப்பதால் பல்வேறு இதய வியாதிகளை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் இது கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வருவதை 12% வரை குறைக்கும்.

பிஸ்தா சாப்பிட்டபிறகு உடலில் க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் அளவு குறைவாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளது. இது பெப்டைட் 1 என்னும் ஹார்மோன் அளவை அதிகரித்து உடலின் க்ளுகோஸ் அளவை சீராக வைக்கிறது.

மற்ற கொட்டைகளை விட, பிஸ்தா பருப்பில் பைத்தோ-ஈஸ்ட்ரஜன்கள் அதிக அளவு உள்ளது இது பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கச் செய்து மாதவிடாய் சுழற்சியையும், இரண்டாம் நிலை பாலினக் காரணிகளையும் சீர்படுத்தும்

Tags: Pista

Leave a Comment