உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கான தகவல்கள்

நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி அதில் 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.

காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.

இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.🐝🐝

1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள்.

தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.

உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும்.🌺🌸

பீட்ரூட் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்க பீட்ரூட் நன்றே பரிந்துரைக்கப்படுகிறது.

இரும்பு, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். 1-2 பீட்ரூட்களை அதன் தோலுடன் மைக்ரோ ஓவனில் அல்லது அடுப்பில் போட்டு சமைக்கவும். அதனை ஆற வைத்து பின் தோலை உரிக்கவும் மீடியம் அளவிலான 1 பீட்ரூட், 3 காரட்கள் மற்றும் 1/2 சீனிக் கிழங்கை கொண்டு ஆரோக்கியமான ஜூஸை தயார் செய்யலாம். தினமும் அதனை ஒரு முறை குடிக்கலாம்.🌺🌸

ஆப்பிள் தினமும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால்
இயல்பான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கலாம்.

ஆப்பிள்களில் இரும்புச்சத்துடன் சேத்து உடல்நலத்திற்கு நன்மையை அளிக்கும் பல பொருட்களை வளமையாக உள்ளது. இவைகள் உங்கள் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை ஆரோக்கியமாக வைக்க தேவையானவை தினமும் தோலுடன் கூடிய ஒரு ஆப்பிளை (முடிந்தால் கிரீன் ஆப்பிள்) கண்டிப்பாக உண்ணுங்கள். 1/2 கப் ஆப்பிள் ஜூஸ் மற்றும் 1/2 கப் பீட்ரூட் ஜூஸை ஒன்றாக கலந்து குடிக்கலாம்.அதனுடன் கொஞ்சம் இஞ்சி அல்லது எலுமிச்சை ஜூஸை சேர்த்து, இதனை தினமும் இருமுறை பருகுங்கள்

மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது.🌺🌸

இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும். மீடியம் அளவிலான ஒரு மாதுளைப்பழத்தை உண்ணுங்கள் அல்லது காலை உணவுடன் சேர்த்து ஒரு டம்ளர் மாதுளை ஜூஸை குடியுங்கள். இல்லையென்றால் காய்ந்த மாதுளை விதை பொடியை 2 டீஸ்பூன் எடுத்து, அதனை வெதுவெதுப்பான பாலில் கலந்து தினமும் ஒரு முறை குடிக்கவும்.🌺🌸

நெட்டில் (செந்தொட்டு செடி) நெட்டில் என்ற செடி உங்கள் ஹீமோகுளோபின் அளவை உயர்த்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இதில் இரும்புச்சத்து, பி வைட்டமின்கள், வைட்டமின் சி மற்றும் இதர வைட்டமின்கள் வளமையாக உள்ளதால், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். 1. உலர்ந்த நெட்டில் இலைகளை 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு கப் வெந்நீரில் போடவும். 2. 10 நிமிடங்கள் அதனை அப்படியே வைத்து விடவும். 3. பின் அதனை வடிகட்டி, கொஞ்சம் தேனையும் சேர்த்துக் கொள்ளவும். 4. இதனை தினமும் இரண்டு முறை குடிக்கவும்.🌺🌸

உடலின் இரும்புச்சத்தை உறிஞ்சும் உணவுகள் !

உங்கள் ஹீமோகுளோபின் அளவு குறையாக இருக்கும் போது, இரும்புச்சத்தை உறிஞ்சும் உங்கள் உடலின் திறனை பாதிக்கும் உணவுகளை கண்டிப்பாக நீங்கள் தவிர்க்க வேண்டும். அப்படி இரும்பு சத்தை தடுக்கும் உணவுகளின்

உதாரணங்கள் சில: – காபி – டீ – கோலா – வைன் – பீர் – கடைகளில் கிடைக்கும் இதர பாக்கெட் தின்பண்டம் – அன்டாசிட் – கால்சியம் அதிகமாக உள்ள உணவுகள் (பால் பொருட்கள்) மற்றும் கால்சியம் மாத்திரைகள்.

செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்

red blood cells hemoglobin

increase hemoglobin in the blood

Leave a Comment